தனுஷ் நடிக்கும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் திரைத்துறையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். கடைசியாக இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தனது 50வது படமான ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமானது ஜூலை மாதத்தில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இவ்வாறு படு பிஸியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக தேரே இஷ்க் மெய்ன் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் தனுஷ். இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. ஏற்கனவே ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ராஞ்சனா, அத்ரங்கி ரே உள்ளிட்ட படங்கள் நடித்திருந்த நிலையில் அந்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. எனவே மூன்றாவது முறையாக இவர்களின் கூட்டணி இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு (2024) அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் கூடுதல் தகவலாக இதன் படப்பிடிப்புகள் வாரணாசி, உத்திர பிரதேசம் மற்றும் மற்ற பகுதிகளில் படமாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று நம்பப்படுகிறது.