spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்று 'இந்தியன் 2' அனைத்து பாடல்களும் வெளியாகும்..... லைக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்று ‘இந்தியன் 2’ அனைத்து பாடல்களும் வெளியாகும்….. லைக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

கடந்த 1996 இல் கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.இன்று 'இந்தியன் 2' அனைத்து பாடல்களும் வெளியாகும்..... லைக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! நீண்ட வருடங்கள் கழித்து சங்கர், கமல் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த படம் இந்தியன் படத்தின் முதல் பாகத்தை போல் ஊழலுக்கு எதிரான கதைகளத்தில் உருவாகியுள்ளது. இந்தியன் படத்தில் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் – இல் சேனாபதி தாத்தா, ஊழலில் ஈடுபட்ட தன் மகனையும் கொன்றுவிட்டு ஹாங்காங் செல்வதாக படம் முடிக்கப்பட்டிருந்தது. இன்று 'இந்தியன் 2' அனைத்து பாடல்களும் வெளியாகும்..... லைக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில் அரசியலில் நடக்கும் ஊழல்களை இணையத்தின் மூலம் கண்டுபிடிக்கும் நடிகர் சித்தாரத்துக்கு உதவுவதற்காக நாடு திரும்புகிறார் சேனாபதி தாத்தா. இதுதான் இந்தியன் 2 படத்தின் கதையாகும். இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று (ஜூன் 1) இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நேரு அரங்கத்தில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இன்று 'இந்தியன் 2' அனைத்து பாடல்களும் வெளியாகும்..... லைக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இவ்விழாவிற்கு ராம்சரண், சிரஞ்சீவி, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் இந்த இடம் பெற்ற அனைத்து பாடல்கள் இன்று மதியம் 3 மணி அளவில் வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இப்படமானது 2024 ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ