- Advertisement -
ஜூனியர் என்டிஆர். நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம ஆர்.ஆர்.ஆர். ராஜமௌலி இயக்கிய இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பட்டையை கிளப்பியது. அதுமட்டுமன்றி ஆஸ்கர், கோல்டன் குளோப் என பெரும் பிரம்மாண்ட மற்றும் மதிப்பிற்குரிய அனைத்து விருதுகளையும் வென்றது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் மற்று் ராம்சரண் நடிக்கும் அடுத்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரட்ட சிவாவுடன் தேவரா என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதைத் தொடர்ந்து தனது 31-வது திரைப்படத்திலும் ஜூனியர் என்டிஆர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இத்திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார்.


