தென்னிந்தியாவில் பின்னடைவைச் சந்திக்கும் பாஜக வேட்பாளர்கள்
- Advertisement -

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை வகிக்கிறார்.
அதேசமயம், தென்னிந்தியாவில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி மற்றும் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். மேலும், கோவையில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் சரிவை சந்தித்தார்.