18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. மத்தியில் அரியணை ஏறப்போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் பின்னடவைச் சந்தித்துள்ளனர். ஒரு தொகுதியில் கூட திமுக வேட்பாளர்களை அவர்கள் முந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.