spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர்... விரைவில் முடிவுக்கு வரும் படப்பிடிப்பு...

ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர்… விரைவில் முடிவுக்கு வரும் படப்பிடிப்பு…

-

- Advertisement -
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் தெலுங்கு திரையுலகின் இளம் நாயகன் ராம்சரணை வைத்தும் ஷங்கர் இயக்கி வருகிறார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வருகிறது. படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.

we-r-hiring
படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில், எஸ்ஜே சூர்யா, ஜெயராம், சுனில், சமுத்திரக்கனி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அரசியல் கதைகளத்தில் இப்படம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையிட படக்குழுவின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 

கேம் சேஞ்சர் திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையிலும், இதுவரை படப்பிடிப்பு முடிவு பெறவில்லை. இந்நிலையில், ஓரிரு நாட்களில் நடிகர் ராம்சரண் தொடர்பான காட்சிகள் நிறைவு பெற உள்ளதாகவும், விரைவில் மற்ற படப்பிடிப்பும் நிறைவு பெறும் எனவும் தகவல் வௌியாகி உள்ளது.

MUST READ