spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா... மெகா நட்சத்திரங்கள் பங்கேற்பு...

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா… மெகா நட்சத்திரங்கள் பங்கேற்பு…

-

- Advertisement -
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தெலுங்கு திரையுலகில் அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவர் நடிப்பு மட்டுமன்றஇ அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும், பவன் கல்யானின் ஜனசேனா கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டது

https://x.com/i/status/1800769850773848191

we-r-hiring
நடந்து முடிந்த ஆந்திர மாநில தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 21 இடங்களிலும், நாடாளுமன்றத்திற்காக போட்டியிட்ட 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்டு, சுமார் ஒரு லட்சத்து, 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்ச்சி போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளரை வென்றார்.

https://x.com/i/status/1800760906642595854

இந்நிலையில், இன்று சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார். அதேபோல, பவன் கல்யாணும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு பிரபலங்கள் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர். ரஜினியைக் கண்ட சிரஞ்சீவியும், பாலகிருஷ்ணாவும் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து ரஜினியிடன் கேள்வி எழுப்பப்பட்டபோது, முடிவு செய்யவில்லை என்று பதில் கூறிய ரஜினிகாந்த், தற்போது அடுத்தடுத்து பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற தலைவர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சிகளில் ரஜினி தவறால் பங்குபெற்று வருவது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

MUST READ