spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமருமகன் முன்பு மாஸ் காட்டிய மாமனார்... சரத்குமாரின் வீடியோ வைரல்...

மருமகன் முன்பு மாஸ் காட்டிய மாமனார்… சரத்குமாரின் வீடியோ வைரல்…

-

- Advertisement -
நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார். போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து விக்ரம் வேதா, சர்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதில் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார்.

 

வில்லி வேடத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வரலட்சுமிக்கு அடுத்தடுத்து வில்லியாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. விஷால் நடித்த சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்திருப்பார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் நாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதனிடையே, வரலட்சுமிக்கும், அவரது காதலரும் தொழில் அதிபருமான நிகேலாய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இருவரின் திருமணமும் வரும் ஜூலை மாதம் 22-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற இருக்கிறது.
we-r-hiring

இந்நிலையில், தனது வருங்கால மருமகன் முன்பாக, நடிகர் சரத்குமார் தண்டால் எடுத்து மாஸ் காட்டியுள்ளார். அவர் தண்டால் எடுக்கும்போது, நிகோலாய் நகைச்சுவையாக எண்ணிக்கொண்டிருந்தார். இந்த வயதிலும் அசராமல் உடற்பயிற்சி மேற்கொள்ளும் சரத்குமாரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சரத்குமார், வரலட்சுமி, நிகோலாய் ஆகியோர் திருமணத்திற்காக துபாயில் ஷாப்பிங் செய்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.

MUST READ