spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் - சட்டப்பேரவையில் இரங்கல்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் – சட்டப்பேரவையில் இரங்கல்

-

- Advertisement -

 

we-r-hiring

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குறித்து 37 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் அருகே கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதில் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 19 பேரும், சேலம் மருத்துவமனையில் 8 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும் புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது; துயர சம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல், சபாநாயகர் அப்பாவு விஷச் சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்  என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

 

 

MUST READ