spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சாலையில் நடந்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

சாலையில் நடந்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

-

- Advertisement -

கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் நடத்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.

கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலையில் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் வயது 50 என்பவர் பணி நிமித்தமாக நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

we-r-hiring

அப்போது அவருக்கு பின்னால் வந்த தமிழக பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விநாயகத்தின் மீதுயில் அவர் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். மேலும், வாகனம் மோதியதில் விநாயகத்தின் இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவரது மகன் நேமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ