கோயிலுக்கு யானையை பரிசளித்த பிரபல நடிகை
- Advertisement -
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி‘ எனும் திரைப்படம் கடந்த மே 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் அடா ஷர்மா, யோஹிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் சைன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வௌியான நாள் முதலே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல நாடுகளில் இப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.

இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஆடா சர்மா. இவர் தமிழில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு மற்றும் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், அதிக கடவுள் பக்தி கொண்ட அவர், கேரளாவில் உள்ள பவுர்ணமிகாவு கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.