spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகளத்தில் மீண்டும் போர்வீரர்கள் - மஹுவா மொய்த்ரா

களத்தில் மீண்டும் போர்வீரர்கள் – மஹுவா மொய்த்ரா

-

- Advertisement -

‘களத்தில் மீண்டும் போர்வீரர்கள்’ என திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

களத்தில் மீண்டும் போர்வீரர்கள் - மஹுவா மொய்த்ரா

we-r-hiring

நாடாளுமன்றத்தில் 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்  நேற்று கூடியபோது புதிய எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.

களத்தில் மீண்டும் போர்வீரர்கள் - மஹுவா மொய்த்ரா

அப்போது திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது X பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 2019 ஆம் ஆண்டு எம்.பி.க்களாக பதவி வகித்த கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலே ஆகியோரின் புகைப்படத்தையும், தற்போது மீண்டும் மக்களவையில் அவர்கள் ஒன்று கூடி எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார். அப்புகைப்படத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் புதிதாக இடம்பெற்றுள்ளார்.

திருவள்ளூர்: 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் (apcnewstamil.com)

மக்களவையில் ஒன்று கூடிய இந்தியா கூட்டணியின் பெண் எம்.பி.க்கள் கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட மஹுவா மொய்த்ரா அதனை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 2024 vs 2019 களத்தில் மீண்டும் போர் வீரர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

MUST READ