பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட் ஆன நிலையில் அதை இப்பொழுது ஹிந்தியிலும் ரீமேக் செய்யவுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதை பற்றி தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.


ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு வந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தை இயக்கியது மட்டும் அல்லாமல் கதானயகனகவும் தடம் பதித்தார்.
இந்த படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அதில் நடிகையாக இவானா, ராதிகா, மற்றும் சத்யராஜ், யோகிபாபு பலரும் நடித்து ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. மற்றும் குறைந்த பட்ஜெட்டில் இயக்கிய இந்த படம் ரூபாய் 100 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியது.

இந்த நிலையில் லவ் டுடே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.
இது போன்ற “நல்ல படங்களை நான் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் எனக்கு உண்டு”. அதை ஹிந்தியிலும் ரீமேக் செய்து பல பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி என்றார்.

ஹிந்தியிலும் பிரதீப் நடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர் பார்த்து வந்த நிலையில் நடிகராக இஷான் கட்டர் அல்லது விக்கி கவுஷல் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் நாயகியாக சாரா அலிகான் என்றும் கல்பாத்தி அர்ச்சனா தெரிவீத்தார். இதனால், லவ் டுடே பட குழுவினர் மட்டும் அல்லாது ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.


