இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் கவின், நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள படம் ’டாடா’.
இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கவின் பேசுகையில், இப்படத்திற்காக 12 வருடங்கள் நான் காத்திருந்தேன் என்றும் இந்த வெற்றி தான் மிகப்பெரிய கனவு என்றும் கூறினார்.


மேலும், நான் எதிர்பார்த்ததை விட இப்படத்திற்கு அதிக வெற்றியை கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றார் நடிகர் கவின்.
’டாடா’ படத்தின் வெற்றியை எனது உயிர் நண்பனாக இருந்த மணிகண்டனுக்கு சமர்ப்பிக்கிறேன்! அவன் உயிருடன் இல்லை என்றாலும் எங்கிருந்தாலும் என் வெற்றியை அவன் பார்த்து ஆசீர்வதித்துக் கொண்டிருப்பான்.
’டாடா’ படத்தை தொடர்ந்து ”ஊர் குருவி” என்ற படத்தில் நடிக்கிறேன்.

சமீபத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்தபோது என்னை வாழ்த்தினார். இந்நிலையில் ’டாடா’ படம் திரைக்கு வந்த அதே நேரத்தில் ”லைகா புரொடக்ஷன்ஸ்” தயாரிக்கும் புதிய படத்தை இயக்க கணேஷ் கே. பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிராகரித்த கதை தான் ’டாடா’. 
அப்போது கைநழுவி சென்றது வாய்ப்பு. இப்போது இயக்குனருக்கு தானாகவே தேடி வந்துள்ளது என்றும் இதற்கு டாடா படத்தின் வெற்றி தான் காரணம் என்று நடிகர் கவின் கூறினார். புதிய படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.


