தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மனு அளித்தப்பின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா பேட்டி.
மக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாத வகையில் கொடியுடன் மூன்று மூன்று பேராக சென்று வாக்கு கேட்க கூட, காவல்துறையினர் அனுமதிப்பதில்லை.
பிரச்சாரம் மேற்கொள்ளும், நாம் தமிழர் கட்சியினை சேர்ந்தவர்கள் மீது போலீசார் தாக்கி கைது செய்கின்றனர்.


திண்ணை பரப்புரை செய்ய அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் எதுவும் சொல்லவில்லை, ஆனால் நாம் தமிழர் கட்சியை மட்டும் ,
இப்போது திடீரென அனுமதி வாங்க வேண்டும் என அதிகாரிகள் சொல்கின்றனர்.
பரப்புரை செய்யவிடாமல் காவல் துறையினர் தடுப்பதோடு, 40 க்கும் மேற்பட்டோரை கைது செய்து உள்ளனர். இதன் மூலம் பிரச்சாரம் செய்ய விடாமல் எங்களை தடுக்க அதிகாரிகள் நினைக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி மட்டும் அனுமதி வாங்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா கேள்வி எழுப்பி உள்ளார்.
