- Advertisement -
தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆளுநர் ரவி மார்சிய தத்துவ கருத்துக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசினார். அவருடைய செயல்பாட்டை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை வண்மையாக கண்டிப்பதாக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
