ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? டாக்டர். ராஜநாயகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியலும் திரும்பியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன். அதிமுக கூட்டணியில் அதிமுகவை சேர்ந்த தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா என்பவர் களம் காண்கிறார்.


இந்த தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு தொகுதி முழுவதும் பணம் விளையாடுகிறது. வாக்களிப்பதற்காக கொடுக்கும் பணத்தை தவிர்த்து பொது மக்களுக்கு தினமும் 1500 ரூபாய் வரை கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். இதனால் ஈரோட்டில் வழக்கமாக நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் வெற்றி கருத்துக் கணிப்பு முடிவு!
பேராசிரியர் சா.ராஜநாயகம் தலைமையில் நடத்தியுள்ள இந்த கருத்துக் கணிப்பின் படி திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளையும், அதிமுக 24.5 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 9.5 சதவீத வாக்குகளையும் பெறும். அதில் 21 சதவீதம் பேர் சொல்ல விரும்பவில்லை என்றும், முடிவு செய்ய வில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ்- நாம் தமிழர் கட்சி கடும் போட்டி
இந்த தேர்தலில் 21 வயதுள்ள இளம் வாக்காளர்களிடம் எடுத்த கருத்து கணிப்பில் 29.5 சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கும், 28.5 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவிற்கு 17 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் சூழ்நிலையில் இந்த கருத்து கணிப்பின் படி வருகிறதா அல்லது மக்கள் வேறு கணக்கு வைத்திருக்கிறார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
