spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅறுவை சிகிச்சைக்குப் பிறகு ஷாலினி அஜித்குமார் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்ப உள்ளார்!

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஷாலினி அஜித்குமார் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்ப உள்ளார்!

-

- Advertisement -

அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாலினி அஜித்குமார் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்ப உள்ளார்!

மருத்துவமனையில் சிகிச்சை முடியும் வரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடிவெடுத்துள்ள நடிகர் அஜித் இல்லம் திரும்பியதும் ஓரிரு நாட்களில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்!

we-r-hiring

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஷாலினி அஜித்குமார் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்ப உள்ளார்!
நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது அறுவை சிகிச்சை முடிவடைந்து வார்டு வார்டிற்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை விரைவாக சீராகி வருகிறது. இந்நிலையில் ஓரிரு நாட்களில் ஷாலினி அஜித்குமார் இல்லம் திரும்புவார் என அவருடைய தரப்பில் கூறியுள்ளனர். ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நடிகர் அஜித்குமார் வெளிநாட்டிலிருந்து உடனடியாக சென்னை வந்து அவரோடு பக்க பலமாக கவனித்து கொள்கிறார்.

மருத்துவமனையில் ஷாலினியை சந்திப்பது போன்ற அஜித் ஷாலினியின் புகைப்படமும் இணையத்தில் வைரலானது இதனை கண்ட ரசிகர்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ஷாலினியை இக்கட்டான சூழ்நிலையின் போதும் கரம் பிடிக்கிறார் என பலரும் மகிழ்ச்சி தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் ஷாலினி வீடு திரும்புவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாலினி இல்லம் திரும்பும் வரை அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடிவெடுத்துள்ள நடிகர் அஜித் அவர் இல்லம் திரும்பிய பிறகு விடா முயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜர்பைஜான் செல்வார் எனவும் தெரிவித்துள்ளனர்.

MUST READ