நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஆரம்பத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். அதன் பின்னர் குஷி போன்ற பல படங்களை இயக்கினார். அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் வில்லனாக கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் தற்போதையெல்லாம் தமிழ் சினிமாவில் வில்லன் என்று நினைத்தாலே எஸ் ஜே சூர்யா தான் நினைவுக்கு வருகிறார். அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி விடுகிறார் எஸ்.ஜே சூர்யா. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எஸ் ஜே சூர்யா மீண்டும் இயக்குனராக உருவெடுக்க போகிறார் என்று புதிய தகவல்கள் வெளிவந்தன. அதன்படி கில்லர் எனும் திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கப் போவதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் எஸ் ஜே சூர்யா ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தது.
தற்போது கில்லர் படத்தில் நடிக்க வைக்க கதாநாயகியை தேடி வருகிறாராம் எஸ் ஜே சூர்யா. மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் எஸ் ஜே சூர்யா இயக்க இருக்கும் கில்லர் படத்தின் பூஜை 2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு 2024 அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -