spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஜிம்பாவே அணியை பந்தாடியது இந்திய அணி

ஜிம்பாவே அணியை பந்தாடியது இந்திய அணி

-

- Advertisement -

ஜிம்பாவே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

we-r-hiring

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணியானது சுப்மான் கில் தலைமையிலும் ஜிம்பாவே அணியானது சிக்கந்தர் ராசா தலைமையிலும் களம் கண்டன. நேற்று நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாவே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதே மைதானத்தில் இந்திய அணி ஜிம்பாவே அணியிடம் இரண்டாவது டி20 போட்டியில் இன்று விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மான் கில் 2 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் எதிர்த்தாடிய அபிஷேக் ஷர்மா அபாரமாக விளையாடி 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 77 ரன்களிலும் ரிங்கு சிங் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழந்து 234 ரன்கள் குவித்தது.

பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாவே அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இன்னாசெண்ட் கயா 4 ரன்களிலும் வெஸ்லெ மாதவெரா 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பிரைன் பெனட் 26 ரன்களிலும் டயான் மையர்ஸ் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 13.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அணியின் ஆட்டநாயகன் விருது சதம் விளாசிய அபிஷேக் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொடரானது (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

 

MUST READ