spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுக்கோட்டை அருகே பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

புதுக்கோட்டை அருகே பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

-

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் பிரபல ரவுடி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி துரை. இவர் ரவுடி இளவரசனை கொலை செய்த வழக்கில் போலீசார் தேடப்பட்டு வந்தவர் ஆவார். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே வம்பன் காட்டுப்பகுதியில் துரை பதுங்கிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ரவுடி துரையை போலீசார் பிடிக்கச் சென்றபோது போலீசாரை துரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஐஜி மனோகர் விசாரணை மேற்கொண்டார். போலீசார் தாக்கிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

MUST READ