மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிற மாநிலங்களுக்கு ஒதுக்கபட்ட நிதியோடு ஒப்பிடும் போது ஒரு சதவிதத்திற்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒன்றிய சுகதார துறை தகவலில் தெரிய வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்டுவதற்கு ஒன்றிய அரசு 2015 ஆம் ஆண்டு அனுமதி வழங்கிய நிலையில், 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் 3 ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமான பணிகள் துவங்கவில்லை என்று ஒன்றிய அரசின் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவமற்கு ரூ.1977.8 கோடி ரூபாய் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ரூ.12.35, இதுவரை 12.35 கோடி மட்டுமே நிதி வெளியிடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் ஆர்டிஐ வாயிலாக இந்தியாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு எவ்வளவு நிதி மதிப்பிடப்பட்டுள்ளது? அதில் எவ்வளவு நிதி வெளியிடப்பட்டுள்ளது? எப்போது கட்டுமான பணிகள் நிறைவு பெறும்? என்பது குறித்து கேள்வி எழுப்ப இருந்தார். அதில் மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு 75% ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1 சதவீதம் அளவிற்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. மேலும்,1977.8 கோடி கட்டுமான பணிக்கு திட்டமிட்ட நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தமிழ்நாடு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி நிதி வெளியிடப்பட்டுள்ளதாகவும், 2026 ஆண்டு பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
