பிரபல நடிகர் ராஜேஷ் மரணம்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முக்கியமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். இவர் திரைத்துறையில் கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அந்த வகையில் இவர் ரஜினி, சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், அஜித், விக்ரம் என பல டாப் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதே சமயம் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றிய இவர் சின்னத்திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவ்வாறு 45 ஆண்டுகளாக சினிமாவில் பணிபுரிந்து வரும் ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மே 29) உயிரிழந்தார். அதாவது நடிகர் ராஜேஷுக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, செல்லும் வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்து விட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உயிரிழக்கும் போது இவருடைய வயது 75 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரைப்பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.