spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsநடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கிய குடியரசு தலைவர்!

நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கிய குடியரசு தலைவர்!

-

- Advertisement -

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கியுள்ளார்.நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கிய குடியரசு தலைவர்!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 அன்று குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இது தவிர அஜித், கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவ்வாறு திரைத்துறையிலும், ரேஸிங்கிலும் சாதனை படைத்து வருகிறார் அஜித். நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கிய குடியரசு தலைவர்!இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 25ஆம் தேதி நடிகர் அஜித்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்தது. இந்த விருது வழங்கும் விழா இன்று (ஏப்ரல் 28) டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் அஜித் தனது மனைவி, மகள், மகனுடன் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார்.

we-r-hiring

அஜித் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் குடியரசு தலைவர் கையால், அஜித் பத்ம பூஷன் விருதை பெரும் போது கைதட்டி மகிழ்ந்துள்ளனர். அஜித் ரசிகர்கள் இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோவையும் இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

MUST READ