அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரை உலகில் டாப் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் சுமார் ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. மாஸ், ஆக்சன், ரொமான்ஸ் என அனைத்திலும் கலக்கி இருந்தார் அல்லு அர்ஜுன். இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் என்ன படம் நடிக்க போகிறார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை த்ரிவிக்ரம் அல்லது அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. அதன்படி தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அட்லீ இப்படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ப்ரோமோவை பார்க்கும் போது இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படம் பேரலல் யுனிவர்ஸ் படம் போலும் தெரிகிறது. இப்படம் ஹாலிவுட் ரேஞ்சில் உருவாகும் என்பதையும், இதில் VFX காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்பதையும் இந்த வீடியோவில் காட்டியுள்ளனர். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இதனை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
Gear up for the Landmark Cinematic Event⚡✨#AA22xA6 – A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir #SunPictures #AA22 #A6 pic.twitter.com/MUD2hVXYDP
— Sun Pictures (@sunpictures) April 8, 2025
மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அடுத்தது பிரபல தமிழ் நடிகர் ஒருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.