spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஅருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'.... அதிரி புதிரி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’…. அதிரி புதிரி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

ரெட்ட தல படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'.... அதிரி புதிரி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ட தல. கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி, பாலாஜி முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். சாம் .சி. எஸ் இந்த படத்திற்கு இசையமைக்க பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதேசமயம் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இந்த படத்தில் நடிகர் தனுஷ் மெலோடி பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்று தகவல் வெளியானது.

we-r-hiring

இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்த நிலையில் தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் தனுஷ் குரலில் வெளியான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில் ரெட்ட தல படத்தில் தனுஷ் பாடி இருக்கும் பாடலும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது தனுஷ் மற்றும் அருண் விஜய் ஆகிய இருவரும் இணைந்து இட்லி கடை திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ