HomeBreaking News“முதலமைச்சர் விஜய் குரல் கொடுக்கணும்!”... சட்டப்பேரவை முன் இறங்கி அடித்த ‘தெருக்குரல்’ அறிவு குண்டுக்கட்டாகக் கைது!

“முதலமைச்சர் விஜய் குரல் கொடுக்கணும்!”… சட்டப்பேரவை முன் இறங்கி அடித்த ‘தெருக்குரல்’ அறிவு குண்டுக்கட்டாகக் கைது!

-

- Advertisement -

சென்னை தலைமைச் செயலகம் (சட்டப்பேரவை) முன்பு நீட் தேர்வுக்கு எதிராகத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவைக் காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“நீட் தேர்வைத் தடை செய்ய வேண்டும்”: சட்டப்பேரவைக்கு வெளியே போராடிய ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு குண்டுக்கட்டாகக் கைது!

டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய அறிவு
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வை ரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு எதிரான எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு இன்று சென்னை சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். தலைமைச் செயலகம் முன்பு சென்ற அவர், “நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்யணும்” என்று உரத்த குரலில் முழக்கங்களை எழுப்பினார்.

we-r-hiring

முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை
சமூகப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாடகர் அறிவு, தனது இந்தப் போராட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்தி முக்கிய முழக்கங்களை முன்வைத்தார். “நீட் தேர்வுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பேச வேண்டும்” என வலியுறுத்திய அவர், சட்டப்பேரவைக்கு வெளியே தொடர்ந்து முழக்கமிட்டவாறு முன்னேறிச் சென்றார்.

குண்டுக்கட்டாகத் தூக்கிய காவல்துறை.. வெடித்த பரபரப்பு!
சட்டப்பேரவை வளாகம் என்பதால் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பாடகர் அறிவின் இந்தத் திடீர் போராட்டத்தால் அதிர்ச்சியடைந்தனர். அவரைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தைக் கைவிடுமாறு எச்சரித்தனர். ஆனால், அவர் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியே இருந்தார். இதனைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த சுமார் 7-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாடகர் அறிவைச் சூழ்ந்துகொண்டு, அவரைத் தரதரவென இழுத்துச் சென்றனர். மேலும், அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றி அதிரடியாகக் கைது செய்தனர். ஒருவர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும், 7 போலீசார் அவரைத் தரதரவென இழுத்துச் சென்ற காட்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவெக கொள்கைப் பாடலைப் பாடியவர்!
கைது செய்யப்பட்டுள்ள பிரபல ராப் பாடகரான ‘தெருக்குரல்’ அறிவு, முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கைப் பாடலைப் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியின் கொள்கைப் பாடலைப் பாடிய கலைஞரே, முதலமைச்சரை வலியுறுத்திச் சட்டப்பேரவை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

“பழம்பெருமை பேசுவது பீற்றிக்கொள்ள அல்ல..” சீமான் அதிரடி பேச்சு! மேடையில் உருகிய தொண்டர்கள்!

MUST READ