HomeBreaking Newsபாரதிராஜா நடிக்கும் 'நிறம் மாறும் உலகில்' ..... மேக்கிங் வீடியோவுடன் வெளியான புதிய அறிவிப்பு!

பாரதிராஜா நடிக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ ….. மேக்கிங் வீடியோவுடன் வெளியான புதிய அறிவிப்பு!

-

- Advertisement -

பாரதிராஜா நடிக்கும் நிறம் மாறும் உலகில் படம் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.பாரதிராஜா நடிக்கும் 'நிறம் மாறும் உலகில்' ..... மேக்கிங் வீடியோவுடன் வெளியான புதிய அறிவிப்பு!

இயக்குனர் இமயம் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான திரு. மாணிக்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நிறம் மாறும் உலகில் எனும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாரதிராஜா. இந்த படத்தில் பாரதிராஜா உடன் இணைந்து ரியோ ராஜ், நட்டி நடராஜ், சாண்டி மாஸ்டர், யோகி பாபு, விக்னேஷ் காந்த், வடிவுக்கரசி, ஆடுகளம் நரேன், மைம் கோபி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை பிரிட்டோ ஜே.பி. எழுதி இயக்கியுள்ளார். தேவ் பிரகாஷ் ரேகன் இந்த படத்திற்கு இசையமைக்க மல்லிகா அர்ஜுன் மணிகண்ட ராஜா, ஆகியோர் இணைந்து இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளனர். சிக்னேச்சர் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தற்போது படக்குழுவினர் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ