வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ரிலீஸ் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வைபவ். அதைத் தொடர்ந்து ஹீரோவாக அறிமுகமான இவர் மேயாத மான், கப்பல், லாக்கப், மலேசியா டு அம்னீசியா, ரணம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் பெருசு திரைப்படம் வெளியானது. அதே சமயம் ஆலம்பனா எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் வைபவ். இது தவிர சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார். இந்த படத்தை விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கியுள்ள நிலையில் பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஹெய்ஸ்ட் காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் அடுத்த மாதம் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும், டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த படத்தில் வைபவ் தவிர அதுல்யா ரவி, ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.