spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsபுத்தாண்டில் ரசிகர்களுக்கு ட்ரீட்....ஒன்னு இல்ல இரண்டு போஸ்டர்களை வெளியிட்ட 'இட்லி கடை' படக்குழு!

புத்தாண்டில் ரசிகர்களுக்கு ட்ரீட்….ஒன்னு இல்ல இரண்டு போஸ்டர்களை வெளியிட்ட ‘இட்லி கடை’ படக்குழு!

-

- Advertisement -

தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.புத்தாண்டில் ரசிகர்களுக்கு ட்ரீட்....ஒன்னு இல்ல இரண்டு போஸ்டர்களை வெளியிட்ட 'இட்லி கடை' படக்குழு!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. தனுஷின் 50வது படமான இந்த படத்தினை தனுஷே இயக்கியும் இருந்தார். அதைத் தொடர்ந்து இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌசிக் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தேனி, பொள்ளாச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.புத்தாண்டில் ரசிகர்களுக்கு ட்ரீட்....ஒன்னு இல்ல இரண்டு போஸ்டர்களை வெளியிட்ட 'இட்லி கடை' படக்குழு!

we-r-hiring

அதே சமயம் இந்த படமானது 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி ஒன்று இல்லை இரண்டு போஸ்டர்களை இட்லி கடை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு போஸ்டரில் நடிகர் தனுஷ் நெத்தியில் பட்டையுடன் காணப்படுகிறார். மற்றுமொரு போஸ்டரில் ராஜ்கிரண் மற்றும் தனுஷ் ஆகியோர் இருக்கின்றனர். இந்த இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ