spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsதனுஷின் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.... எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ட்ரெய்லர்!

தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’…. எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ட்ரெய்லர்!

-

- Advertisement -

தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.தனுஷின் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.... எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ட்ரெய்லர்!

நடிகர் தனுஷ் கடந்த 2017 இல் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தனது 50வது படமான ராயன் திரைப்படத்தையும் இயக்கி பெயர் பெற்றார். தற்போது இவர், இட்லி கடை எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதற்கிடையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். லியோன் பிரிட்டோ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஜி.கே. பிரசன்னா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

we-r-hiring

இந்த ட்ரெய்லரின் ஆரம்பத்தில் நடிகர் தனுஷ், இப்படம் வழக்கமான கதை தான் என்று சொல்கிறார். அதன் பின்னர் நடிகர் பவிஷ் மற்றும் பிரியா வாரியர் ஆகிய இருவரும் காதலிப்பது போன்று காட்டப்படுகிறது. ஆனால் பவிஷ் அதற்கு முன்பாக, அனிகா சுரேந்திரனை காதலித்திருக்கிறார். ஆனால் அனிகா சுரேந்திரனுக்கு தற்போது வேறொருவருடன் திருமணமாகப் போகிறது. எனவே இவர்களின் நண்பர்கள் பவிஷையும், அனிகாவையும் சேர்த்து வைக்க திட்டம் போடுவது போல் தெரிகிறது. இது இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது தனுஷ் சொன்னது போல் இது வழக்கமான கதை போல் இருந்தாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ