spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஹாரர் திரில்லரில் ஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்'..... டீசரை வெளியிட்ட தனுஷ்!

ஹாரர் திரில்லரில் ஜி.வி. பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’….. டீசரை வெளியிட்ட தனுஷ்!

-

- Advertisement -
kadalkanni

கிங்ஸ்டன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அதேசமயம் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஹாரர் திரில்லரில் ஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்'..... டீசரை வெளியிட்ட தனுஷ்!அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் இடி முழக்கம் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் ஜி.வி. பிரகாஷ். இதற்கிடையில் இவர், கிங்ஸ்டன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே திவ்யபாரதி, ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பேச்சுலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிங்ஸ்டன் திரைப்படத்தினை இந்த படத்தினை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் நிறுவனத்தின் கீழ் இந்த படத்தினை தயாரித்து தானே இசையமைத்துள்ளார். கடல் சாகச திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது.

இந்த டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்த டீசரை பார்க்கும்போது இந்த படம் கடலில் நடக்கும் ஹாரர் திரில்லர் கதை என தெரியவந்துள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த ட்ரெய்லரின் இறுதியில் இப்படம் 2025 மார்ச் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ