HomeBreaking Newsடிசம்பர் 14 முதல் 22 வரை அரையாண்டுத் தேர்வுகள்;ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு!...

டிசம்பர் 14 முதல் 22 வரை அரையாண்டுத் தேர்வுகள்;ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

-

- Advertisement -

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் கூட்டாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதன்படி, டிசம்பர் 14-ம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 22-ம் தேதி நிறைவடைகின்றன. டிசம்பர் 23-ம் தேதி பள்ளி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, டிசம்பர் 24-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை கால அட்டவணையைத் தெளிவுபடுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை கோஷ்டிப் பூசல் இல்லாத வலுவான அமைப்பாக மாற்றுவதே இலக்கு – மாணிக்கம் தாகூர் பேட்டி!

 

 

 

MUST READ