HomeBreaking News100 நாடுகளுக்கு இந்திய தளவாடங்கள் ஏற்றுமதி - திரவுபதி முர்மு பெருமிதம் !

100 நாடுகளுக்கு இந்திய தளவாடங்கள் ஏற்றுமதி – திரவுபதி முர்மு பெருமிதம் !

-

இந்தியா 100 க்கு அதிகமான நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாட ஏற்றுமதி கடந்த காலங்களை விட 30% அதிகரித்துள்ளதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார்.

வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி நாட்டின் பாதுகாப்பில் மட்டுமின்றி, இந்திய மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறையில் திறமையான அதிகாரிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது பயிற்சி பெற்று வரும் இந்திய மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பின்னர் ராணுவ அதிகாரிகளிடையே பேசினார். அப்போது, ”இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். நாட்டிலேயே முதன்மையான இந்த ராணுவ பயிற்சி கல்லூரியில் 26 நாடுகளை சேர்ந்த 38 அதிகாரிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் இக்கல்லூரியில் பயிற்சி பெற தேர்ச்சி பெற்ற அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்றார்.

இது போன்று ராணுவ பயிற்சி கல்லூரியில் பெண் அதிகாரிகளும் பயிற்சி பெறுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறிய திரௌபதி முர்மு இனி வரும் காலங்களில் அதிகளவில் பெண்கள் பயிற்சியில் சேர்வார்கள் என எதிர்பார்ப்பதாக கூறினார். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வரும் நிலையில் பாதுகாப்பு துறையில் சேர்ந்து நாட்டுக்காக சேவை புரிவது பாராட்டுக்குரியது என்றார். குறிப்பாக உலகின் உயரமான போர்களமான சியாச்சினில் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரிகளை சந்தித்ததாகவும் முப்படைகளில் உள்ள முக்கிய பொறுப்புகளில் பெண்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இந்திய கடற்படையில் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி ஒருவர் காமாண்டிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக  தெரிவித்தார்.

இம்மாத தொடக்கத்தில் கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த கப்பலில் பணிபுரியும் பெண் அக்னி வீரர்கள் மற்றும் மாலுமிகளை சந்தித்ததாக கூறிய முர்மு இனி வரும் காலங்களில் பல பெண்கள் முப்படைகளும் இணைவார்கள் என நம்புவதாகவும் தற்போது இந்திய வரலாற்றில் பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி, சாதனை புரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி, இந்திய மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறையில் திறமையான அதிகாரிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்து வருவதாக கூறிய முர்மு 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி நவீன தொழில்நுட்பத்துடன், டிஜிட்டல் மயத்துடன் சிறப்பான உள் கட்டமைப்புடன் பயிற்சி அளித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூளினார்.

சர்வதேச அளவில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிகளிலேயே வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி ராணுவ அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சி அளித்து வருவதாகவும் இக்கல்லூரியில் பயிற்சி பெற்ற பல அதிகாரிகள், தங்கள் நாடுகளில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்திய பாதுகாப்புத்துறையினர் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் முன்னோடியாக இருப்பதுடன் சிறப்பாக பணியாற்றி நாட்டை பாதுகாப்பதில் பெரும் பங்காற்றி வருவதாகவும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அவர்களின் குடும்பத்தாரின் பங்கு அலப்பரியது என்றார்.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதாகவும் இந்த வளர்ச்சியை உலக நாடுகள் அங்கீகரத்து வருவதாக கூறிய திரௌபதி முர்மு இந்தியா எதிர்கால சாவல்களை எதிர்கொள்ளும் வகையில் தனித்துவத்துடன், சுய சார்புடன் முன்னேறி வருகிறது என்றார். தற்போது இந்திய பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, தளவாடங்களை ஏற்றுமதி செய்ய வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வருவதாகவும் ஹெச்ஏஎல், டிஆர்டிஓ போன்ற பாதுகாப்பு தளவடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் புதிய ஆயுதங்களை உருவாக்கி ஏற்றுமதியில் கால் தடம் பதித்து வருவதாக கூறினார்.

தற்போது இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் கடந்த காலங்களை விட 30% ஏற்றுமதி அதிகரித்து இருப்பதாகவும் அதற்கு மேக் இன் இந்தியா திட்டமே காரணம் என்றார். உலக அளவில் தற்போது மாறி வரும் புவி அரசியல் அமைப்பு மாற்றத்தால் நமக்கு புதிய சவால்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அதனை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்ற அவர்.நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றுமின்றி, சைபர் குற்றங்கள் மற்றும் தீவிரவாதத்தை சமாளிக்க வேண்டி நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

காலநிலை மாற்றம் என்பது பெரிய சவாலாக உருவாகியுள்ள நிலையில்
அதற்கான ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றும் நமது முப்படைகள் அவற்றை சமாளிக்கும் வல்லமை படைத்தவைகளாக இருப்பதாக கூறினார்.

நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய திரௌபதி முர்மு ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் வெளிநாட்டு அதிகாரிகளிடம் இந்தியா உலகத்தை ஒரு குடும்பமாக பாவித்து வருவதாக கூறிய முர்மு சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

‘10 நிமிடம் மட்டும்தான்… என்னடா கதை விடுற…’ மேடையிலேயே சீமானை கதறவிட்ட காளியம்மாள்!

MUST READ