ஜனநாயகன் முதல் பாடல் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் கடைசியாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து விஜய், ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் விஜயின் 69ஆவது படம் ஆகும். இதனை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத்தின் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து முன்னோட்ட வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் நாளை (நவம்பர் 8) வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், இந்த பாடல் நாளை மாலை 6.03 மணி அளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘தளபதி கச்சேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த பாடலில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்றும் தளபதி விஜய் தான் இந்த பாடலை பாடியிருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதியாக மாறியுள்ள விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி முதல் திருவிழா போல் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


