HomeBreaking Newsதனியார் விற்பனை மையத்தின் அலட்சியம் - வாகனத்தை ஏரித்த வாடிக்கையாளர்

தனியார் விற்பனை மையத்தின் அலட்சியம் – வாகனத்தை ஏரித்த வாடிக்கையாளர்

-

தனியார் விற்பனை மையத்தின் அலட்சியம் - வாகனத்தை ஏரித்த வாடிக்கையாளர்சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனது மின்சார வாகனத்தை விற்பனை மையம் வாசலில் வைத்து எரித்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு முன் பலமுறை புகார்கள் தெரிவித்தும் சரியாக தன்னுடைய மின்சார வாகனத்தை சரி செய்து தரவில்லை எனக் கூறி ஆதங்கத்தில் தீ வைத்து எரித்துள்ளார்.

தனியார் விற்பனை மையத்தின் அலட்சியம் - வாகனத்தை ஏரித்த வாடிக்கையாளர்

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி இவர் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு தனது மின்சார வாகனம் அத்தார் என்ற வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.

தனியார் அத்தார் விற்பனை மையத்தில் தனது இருசக்கர வாகனத்தை சரி செய்ய கொடுத்துள்ளார். முறையாக சரி செய்யாமல் வாகனத்தை திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

தனியார் விற்பனை மையத்தின் அலட்சியம் - வாகனத்தை ஏரித்த வாடிக்கையாளர்

இதனால் திரும்பச் சென்று அதே தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு முறையாக தனியார் நிறுவனம் பதில் அளிக்காத நிலையில் அதன் வாசலில் முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொளுத்தி நெஞ்சில் அடித்துக் கொண்டு யாரும் இந்த வாகனத்தை வாங்காதீர்கள். நான் ஏமாந்து விட்டேன் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை ஓடிடியில் வெளியாகும் ‘பிரதர்’ திரைப்படம்!

 

MUST READ