பராசக்தி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் 25வது படமாக உருவாகும் திரைப்படம் தான் ‘பராசக்தி’. இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்ற சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படமானது 1965 காலகட்டத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் படப்பிடிப்புகள் மதுரை, சிதம்பரம், இலங்கை, சென்னை போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். மேலும் அதர்வா, ரவி மோகன் ஆகியோரும் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘அடி அலையே’ எனும் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா ஆகிய இருவருக்குமான இந்த காதல் பாடலை ஷான் ரோல்டன் மற்றும் தீ ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.


