spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking News'பராசக்தி' படத்தின் அடுத்த ஹிட் பாடல் ரெடி... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

‘பராசக்தி’ படத்தின் அடுத்த ஹிட் பாடல் ரெடி… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

-

- Advertisement -

பராசக்தி படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.'பராசக்தி' படத்தின் அடுத்த ஹிட் பாடல் ரெடி... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘பராசக்தி’. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், ரவி கே. சந்திரன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர். இந்த படமானது இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பராசக்தி' படத்தின் அடுத்த ஹிட் பாடல் ரெடி... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!இதன் படப்பிடிப்பு ஏற்கனவே மதுரை, சிதம்பரம், இலங்கை, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தது டப்பிங் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படம் 2026 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ‘அடி அலையே’ எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 'பராசக்தி' படத்தின் அடுத்த ஹிட் பாடல் ரெடி... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் நாளை (நவம்பர் 23) மாலை 5.30 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஏற்கனவே ‘பராசக்தி’ படத்தின் இரண்டாவது பாடல், தனது கேரியரில் சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும் என்று அப்டேட் கொடுத்திருந்தார். அதனால் இந்த பாடலின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ