கூலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினி தற்போது தனது 171 வது படமான கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினி, ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ் , ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்த நிலையில் படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் பாலிவுட் நடிகராக அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த படம் எப்போது திரைக்கு வரும்? எனவும் ரசிகர்கள் முதலில் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகிவிட்டார்கள்.