டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
சசிகுமார் கடந்தாண்டில் வெளியான கருடன், நந்தன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தை இயக்க ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்துள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் இதன் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வருகின்ற மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அதே சமயம் இந்த படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை எமோஷனலாகவும், கலகலப்பாகவும் சொல்வது தான் டூரிஸ்ட் ஃபேமிலியின் கதை போல் தெரிகிறது. எனவே இப்படம் சசிகுமாருக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனம் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இணையத்திலும் வைரலாகி வருகிறது.