சசிகுமார் நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஃப்ரீடம், மை லார்ட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து புதிய படம் ஒன்று நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர இவர், குற்றப்பரம்பரை நாவலை தழுவி வெப் தொடர் ஒன்றை இயக்கப் போவதாகவும் சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் இவர், அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் சசிகுமார் உடன் இணைந்து சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் இப்படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன. எனவே வருகின்ற மே 1 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.