சித்தார்த் நடிக்கும் 3BHK படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சித்தார்த் நடிப்பில் கடைசியாக டெஸ்ட் திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இவர், தனது 40வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு 3BHK என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்க எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் சித்தார்த்துக்கு அப்பாவாக சரத்குமார் நடிக்க அம்மாவாக தேவயானி நடித்துள்ளார். தங்கையாக மீதா ரகுநாத் நடிக்க, ஜோடியாக சைத்ரா ஆச்சர் நடித்துள்ளார். குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இப்படம் 2025 கோடையில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படமானது வருகின்ற ஜூலை 4ஆம் தேதி திரைக்கு வரும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.