STR 49 படத்தின் புதிய அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.
லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு கடைசியாக ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் இவர், ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்தில் சந்தானம், கயடு லோஹர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படமானது கைமாறி உள்ளது. அதாவது சிம்புவின் 49ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. அதன்படி தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதாவது இந்த அறிவிப்பு வீடியோவில் விரைவில் புதிய அப்டேட் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி STR 49 படம் குறித்த ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த படமானது வடசென்னை படத்தின் யுனிவர்ஸ் போல் தெரிகிறது. ஆகையினால் சிம்புவின் தோற்றம் வித்தியாசமாகவும் மிரட்டலாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த அறிவிப்பை சிம்பு ரசிகர்கள் கொண்டாடிக் தீர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.