HomeBreaking News'STR 49' படத்தின் அடுத்த அப்டேட் ரெடி.... டைம் குறித்த படக்குழு!

‘STR 49’ படத்தின் அடுத்த அப்டேட் ரெடி…. டைம் குறித்த படக்குழு!

-

- Advertisement -

STR 49 படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.'STR 49' படத்தின் அடுத்த அப்டேட் ரெடி.... டைம் குறித்த படக்குழு!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து சிம்பு, தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். 'STR 49' படத்தின் அடுத்த அப்டேட் ரெடி.... டைம் குறித்த படக்குழு!இதற்கிடையில் இவர், பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன்படி தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். சாய் அபியங்கர் இருந்து இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகை கயடு லோஹர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். 'STR 49' படத்தின் அடுத்த அப்டேட் ரெடி.... டைம் குறித்த படக்குழு!சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 30) மாலை 6 மணி அளவில் புதிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த அறிவிப்பானது நடிகர் சந்தானம் இப்படத்தில் இணைந்தது தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ