HomeBreaking Newsசம்பவம் செய்ய தேதி குறித்த சுந்தர்.சி.... 'கேங்கர்ஸ்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

சம்பவம் செய்ய தேதி குறித்த சுந்தர்.சி…. ‘கேங்கர்ஸ்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சம்பவம் செய்ய தேதி குறித்த சுந்தர்.சி.... 'கேங்கர்ஸ்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவரது இயக்கத்தில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியாகி வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து சுந்தர்.சி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் இவர், கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார். இந்த படத்தில் சுந்தர். சியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தலைநகரம், நகரம் போன்ற படங்களுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. எனவே எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்து வருகின்றன. மேலும் இந்த படத்தில் சுந்தர்.சி வடிவேலுவுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் வடிவேலு லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.சம்பவம் செய்ய தேதி குறித்த சுந்தர்.சி.... 'கேங்கர்ஸ்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு! அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் 2025 ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் டீசர் போன்ற மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க சத்யா. சி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ