HomeBreaking Newsசூர்யா விஜய் சேதுபதியின் 'பீனிக்ஸ்'.... புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சூர்யா விஜய் சேதுபதியின் ‘பீனிக்ஸ்’…. புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

-

- Advertisement -

சூர்யா விஜய் சேதுபதி நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சூர்யா விஜய் சேதுபதியின் 'பீனிக்ஸ்'.... புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, 2019 ஆம் ஆண்டு வெளியான சிந்துபாத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின்னர் ஹீரோவாக உருவெடுத்திருக்கும் இவர் புதிய படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பீனிக்ஸ் – வீழான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியிருக்கிறார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து, படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியானது. சூர்யா விஜய் சேதுபதியின் 'பீனிக்ஸ்'.... புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!அதே சமயம் இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியானதால் பீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் 2025 ஜூலை 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ