HomeBreaking Newsதமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை அறிவிப்பு

-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்" என அறிவிப்பு!
File Photo

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

MUST READ