HomeBreaking Newsமீண்டும் இணையும் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மீண்டும் இணையும் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணி மீண்டும் இணைய போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.மீண்டும் இணையும் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். அதன்படி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதிலும் தனுஷ் நடிப்பில் கிட்டத்தட்ட நான்கு படங்களை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய 4 படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணி 5வது முறையாக மீண்டும் இணைய இருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி வெற்றிமாறனின் 9வது படத்தில் நடிகர் தனுஷ் இணைய இருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் கடைசியாக விடுதலை 2 திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கும் நிலையில் அடுத்தது சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். அதன் பின்னர் தனுஷை இயக்குவார் என்று நம்பப்படுகிறது. அதற்குள் நடிகர் தனுஷும் தன்னுடைய கமிட்மெண்டுகளை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ