spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஅடுத்த ஹிட்டுக்கு தயாரான விஷ்ணு விஷால்.... 'ஆர்யன்' பட டீசர் வைரல்!

அடுத்த ஹிட்டுக்கு தயாரான விஷ்ணு விஷால்…. ‘ஆர்யன்’ பட டீசர் வைரல்!

-

- Advertisement -

விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.அடுத்த ஹிட்டுக்கு தயாரான விஷ்ணு விஷால்.... 'ஆர்யன்' பட டீசர் வைரல்!

தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி ஆகிய வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் இரண்டு வானம், ஓர் மாம்பழ சீசனில், கட்டா குஸ்தி 2 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இவர், ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். அடுத்த ஹிட்டுக்கு தயாரான விஷ்ணு விஷால்.... 'ஆர்யன்' பட டீசர் வைரல்!பிரவீன் .கே இதனை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட இந்த படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இந்த டீசரை பார்க்கும்போது ‘ராட்சசன்’ படத்தை போல் இந்த படம் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ