spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneralசென்னை: மூதாட்டியிடம் கைவரிசை! செயின் அபேஸ்!

சென்னை: மூதாட்டியிடம் கைவரிசை! செயின் அபேஸ்!

-

- Advertisement -

சென்னை தண்டையார்பேட்டையில் மூதாட்டியின் கவனத்தை திசை திருச்சி செயினை பறித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்து வருகிறார். செல்லம்மாள் வேலைக்கு செல்வதற்காக சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 பேர் செல்லம்மாளிடம், இப்பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதால் செயினை கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

we-r-hiring

இதை நம்பிய செல்லம்மாள், தன்னுடைய 2 சவரன் செயினை கழற்றிய போது 2 பேரும் உதவி செய்வதுபோல் நடித்து அதை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த பையில் செயின் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதாக செல்லம்மாள் உணர்ந்தார். இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

MUST READ